எஸ்.எம்.எம்.முர்ஷித்
பொதுஜன பெரமுன கட்சியின் கல்குடா தொகுதி முக்கியஸ்தர் ஏ.முஸ்தபாவின் அழைப்பின் பேரில் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை பிரதேசத்திற்கு ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியின் பிரமுகர்கள் வருகைதந்து மக்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டனர்.
இன்று சனிக்கிழமை காவத்தமுனை முபாறக் ஜூம்மா பள்ளிவாயலுக்கு வருகை தந்த குழுவினர் பள்ளிவாயல் நிருவாம், பிரதேச விளையாட்டுக்கழக பிரிதிநிதிகள், விவசாயிகள், மண் வியாபாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடியதுடன் அவர்கள் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான தீர்வுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிறைவேற்றித் தருவதற்கு உதவி செய்வதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் யூ.எல்.அஹ்மட் லெப்பை, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் முஹம்மட் உவைஸ் முஹம்மட், பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்களான முஸ்டீன் இஸ்மாயில், பிரதேசத்தின் வட்டார இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment