கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள இலங்கை ஜெர்மன் தொழிலுட்பக் கல்லூரியின் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள இலங்கை ஜெர்மன் தொழில் பயிற்சி நிலையத்திற்கு இன்று பகல் (18-02-2020) அமைச்சர் விஜயத்தினை மேற்கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
ஏற்கனவே தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்கள் இங்கேயிருக்கக்கூடிய குறைபாடுகள் தொடர்பில் பல தடவைகள் தெரிவித்திருந்தார்கள். இது தொடர்பாக இந்த துறைசார்ந்த அமைச்சர்களுடனும் கலந்துரையாடியிருக்கின்றேன்.
மாணவர்கள் தங்களுடைய கல்விச் செயற்பாட்டை நம்பிக்கையுடன் முன்னெடுக்குமாறும் இன்றும் நாளையும் சம்பந்தப்பட்ட அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றேன். இந்தக் கல்வியை நீங்கள் தொடர்வதுடன் உங்களது சமூகத்திற்குப் பயனடையச் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதஸ்வரன், தொழிலுட்பக் கல்லூரியின் அதிபர் எர்வின் சூஸ். மற்றும் தொழிலுட்பக் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment