வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட பெண்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
பஸ் வண்டியும் காரும் ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளாகின. விபத்து இடம்பெற்ற வேளையில் காரில் குழந்தையொன்று உட்பட 05 பேர் பயணித்துள்ளனர்.
இவ்விபத்தில் குறித்த காரின் சாரதி உயிரிழந்துள்ளதோடு, இவர் வெல்லவாய ஹந்தபானகல றந்தெனிகொடயாய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவரென பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த கர்ப்பிணி பெண் உட்பட பெண்கள் மூவர் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை இன்று (25) வெல்லவாய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment