கொரோனா குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள புதிய எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 25, 2020

கொரோனா குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள புதிய எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவும் ஆபத்து இருப்பதாகவும், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

தற்போதைய சூழலில் இது உலகம் முழுதும் பரவும் நிலை இல்லை என்றாலும், உலக நாடுகள் அதற்கு எதிராக அதிகம் செயற்பட தயார் நிலையில் இருக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. 

கொரோனா வைரஸை ஒரு தொற்று நோயாக அறிவிக்கவுள்ள நிலையில் இருக்கும் உலக சுகாதார ஸ்தாபனம், ஆனால் நாடுகள் "ஆயத்தத்தின் ஒரு கட்டத்தில்" இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 

குறித்த தொற்றுநோயானது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு உலகின் பல பகுதிகளில் விரைவாக பரவிவருகிறது. கொவிட் -19 என்ற சுவாச நோயை ஏற்படுத்தும் வைரஸினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகின்றது. 

தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது. 

இருப்பினும், பெரும்பாலான நோய்த் தொற்றுகள் சீனாவிலில் பரவிய வைரஸின் அசல் மூலமாகும். சீனாவில் இதுவரை 80,000 க்கும் அதிகமானோர் பாதிக்கபட்டுள்ளதோடு 2,663 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

உலகிலுள்ள சுமார் 30 நாடுகளில் 1,200 க்கும் மேற்பட்டோர் பதிப்புக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 20 க்கும் மேற்பட்ட இறப்புகள் சீனாவைத் தவிர ஏனைய நாடுகளில் பதிவாகியுள்ளன. இத்தாலியில் மாத்திரம் ஏழு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 

கொரோனா தொற்று பாதிப்பால் உலக பங்குத் சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான முயற்சிகளைத் தொடர அடுத்த மாதம் சீன பாராளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸின் வருடாந்த கூட்டத்தை ஒத்திவைப்பதாக சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment