காலநிலை மாற்றம், மோசமான உணவுகளால் உலகின் ஒவ்வொரு குழந்தைக்கும் உடனடி ஆபத்து : ஐ.நா அறிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 19, 2020

காலநிலை மாற்றம், மோசமான உணவுகளால் உலகின் ஒவ்வொரு குழந்தைக்கும் உடனடி ஆபத்து : ஐ.நா அறிக்கை

உலகின் ஒவ்வொரு குழந்தையும் காலநிலை மாற்றம் மற்றும் மோசமான உணவுகளால் உடனடி ஆபத்தை எதிர்கொண்டுள்ளது என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உலகின் எந்த நாடும் தனது அடுத்த தலைமுறையை கார்பன் வெளியேற்றம், இயற்கை அழிவு மற்றும் அதிக கலோரி கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து பாதுகாப்பதற்கான போதிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என உலகின் குழந்தை மற்றும் இளம்பருவ சுகாதார நிபுணர்கள் 40 பேர் தெரிவித்துள்ளனர். 

செல்வந்த நாடுகளால் வெளிவிடப்படும் அளவுக்கதிகமான கார்பன் அனைத்து பிள்ளைகளினதும் எதிர்காலத்திற்கு ஆபத்தானதாக மாறியுள்ளதுடன், அவர்களை கடும் நோய்த்தாக்கங்களிற்கு உட்படுத்தும் எனவும் ஐநாவின் அறிக்கை தெரிவித்துள்ளது. 

கடும் வெப்பம் மற்றும் உட்பட பல நோய்த் தாக்கங்களிற்கு குழந்தைகள் ஆளாகக்கூடும் என ஐநா தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனமும் யுனிசெவ் அமைப்பும் இணைந்து இந்த ஆய்வினை முன்னெடுத்துள்ளன. 

ஐ.நாவின் இந்த அறிக்கை கொழும்பு இனிப்பு சேர்க்கப்பட்ட பொருட்கள், புகையிலை மதுபானம் போன்வற்றினை சந்தைப்படுத்துவதால் ஏற்படும் அபாயம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளது. 

உலகின் எந்தவொரு நாடும் சிறுவர்களின் உடல் நலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கவில்லை என்பதே முக்கிய செய்தி என பேராசிரியர் அன்டனியோ கொஸ்டெலோ தெரிவித்துள்ளார். 

வளி மாசடைதல் காரணமாக குழந்தைகளின் நுரையீரல்களிற்கு பாரிய பாதிப்பு ஏற்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர் இதற்கு தீர்வு காண்பதற்கு குறைந்த அளவு காலமே உள்ளது என தெரிவித்துள்ளார். 

எங்களிடம் தீர்வுகள் உள்ளன ஆனால் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் தலைமைத்துவமும் உறுதிப்பாடும் எங்களிடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளில் உள்ள ஐந்து வயதிற்குட்பட்ட 250 மில்லியன் குழந்தைகள் போசாக்கின்மை மற்றும் வறுமையின் ஏனைய தாக்கங்களால் வளர்ச்சி குறைந்தவர்களாக காணப்படுகின்றனர் எனவும் ஐநா தெரிவித்துள்ளது. 

இதேவேளை பருமனான குழந்தைகளின் எண்ணிக்கை 1975 ற்கு பின்னர் 11 மடங்காக அதிகரித்துள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment