பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அமெரிக்காவிற்கு மனித உரிமை தொடர்பில் கருத்துரைக்கும் தகுதி கிடையாது - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 19, 2020

பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அமெரிக்காவிற்கு மனித உரிமை தொடர்பில் கருத்துரைக்கும் தகுதி கிடையாது

(இராஜதுரை ஹஷான்) 

இலங்கையின் 30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்காகவே இராணுவத் தளபதி சவேந்திர சில்வா யுத்த வெற்றிக்கு பாரிய பங்களிப்பு வழங்கினார். பலதரப்பட்ட மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அமெரிக்காவிற்கு மனித உரிமை தொடர்பில் கருத்துரைக்கும் தகுதி கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களின் நோக்கங்களுக்கு அமையவே அமெரிக்கா இராணுவத் தளபதிக்கு பயணத் தடை விதித்துள்ளது. இந்த நெருக்கடியை இராஜத்தந்திர மட்டத்தில் வெற்றிக் கொள்வோம் எனவும் தெரிவித்தார். 

வாழ்க்கை செலவுகள் தற்போது அதிகரித்த அளவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக மரக்கறி விலையேற்றத்தை குறிப்பிட வேண்டும். ஜனவரி மாதத்துடன் ஒப்பிடைகையில் இம்மாதம் மரக்கறியின் விலை குறைவான அளவிலேயே காணப்படுகின்றது. 

மரக்கறி விலையினை பொறுத்தவரையில் மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. இடைத் தரகர்களின் செயற்பாடுகளினால் பொதுமக்கள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும். 

30 வருட கால யுத்தம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது அல்ல. உலகில் தடை செய்யப்பட்ட பயற்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பினை முற்றாக இல்லாதொழிக்க வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு காணப்பட்டது இது சாதார விடயம். 

ஒரு நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அமைப்புக்களுக்கு எந்த நாடுகளும் ஆதரவு வழங்காது இதில் இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல, விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கங்களை கருத்திற் கொண்டு அமெரிக்கா இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு பயணத் தடையினை விதித்துள்ளது. 

பல மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அமெரிக்காவின் மீது சுமத்தப்பட்டுள்ளன. ஆகவே எமது நாடு தொடர்பில் தீர்மானங்களை தன்னிச்சையாக எடுக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு கிடையாது. 

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரையில் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. 

இவ்வாறான நிலையில் எவ்வித முன்னறிவித்தல், பேச்சுவார்த்தைகளுமின்றி அமெரிக்க பயணத் தடை விதித்துள்ளமை கடுமையாக கண்டனத்திற்குரியவை. இந்த நெருக்கடியை அரசாங்கம் வெற்றிக் கொள்ளும் என்றார்.

No comments:

Post a Comment