அரசாங்கம் மைத்திரியை தெரிவுசெய்து மக்களின் எதிர்பார்ப்பை சிதைத்துள்ளது - பாலித்த ரங்கே பண்டார - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

அரசாங்கம் மைத்திரியை தெரிவுசெய்து மக்களின் எதிர்பார்ப்பை சிதைத்துள்ளது - பாலித்த ரங்கே பண்டார

(செ.தேன்மொழி) 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீ லங்கா பொதுஜன சுதந்திர முன்னணி தவிசாளராக நியமித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார, அரசாங்கத்தின் இந்த செயற்பாடு நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை சிதைத்துள்ளது என்றும் கூறினார். 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய பிரதான நபரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீ லங்கா பொதுஜன சுதந்திர முன்னணியின் தவிசாளராக நியமித்துள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது. 

இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆணைக்குழுவொன்றை நியமித்த போது நான் அதற்கு நன்றி தெரிவித்திருந்தேன், ஆனால் அதனை தற்போது மீளப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். 

நாட்டு மக்கள் அனைவருமே உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தனர். 

இதன் காரணமாகவே ஜனாதிபதி தேர்தலின்போது மக்கள் கோத்தாபயவை வெற்றியடையச் செய்திருந்தனர். ஆனால் தாம் ஆட்சிக்கு வந்த உடனே தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஆணைக்குழுவொன்றை அவர் நியமித்திருந்தாலும், அந்த குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் மக்கள் தற்போது நம்பிக்கையிழந்துள்ளனர். 

இவர்களின் கூட்டணியின் தவிசாளராக மைத்திரியை அறிவித்ததை அடுத்து இந்த விவகாரம் தொடர்பில் இருந்த குறைந்தபட்ச நம்பிக்கையும் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment