உடற்தகுதி பரிசோதனைக்கு சென்ற மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் - இளஞ்செழியன் காட்டம்..! - News View

About Us

About Us

Breaking

Sunday, February 2, 2020

உடற்தகுதி பரிசோதனைக்கு சென்ற மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் - இளஞ்செழியன் காட்டம்..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அரச வைத்தியசாலையில் உடற்தகுதி பரிசோதனைக்காக சென்ற பாடசாலை மாணவிகள் மீது உயர் பதவியில் உள்ள வைத்தியர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட விடயம் அம்பலமாகியுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பாக தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான பீற்றர் இளஞ்செழியன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், கடந்த மாதம் 10 ஆம் திகதி மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்கள் உடற்தகுதி சோதனைக்கு சென்றுள்ளனர். 

இதன்போது மாவட்டத்தின் வைத்தியசாலை ஒன்றில் பொறுப்பு வாய்ந்த பதவில் உள்ள வைத்தியர் ஒருவர் குறித்த மாணவிகளிடம் தனது இழிவான நடத்தையினைக் காண்பித்துள்ளார். 

மேலும் உடற்தகுதி பரிசோதனைக்காக சென்றிருந்த மாணவிகள் காலையில் 7 மணியில் இருந்து மாலை 7 மணி வரை வைத்தியசாலையில் மறிக்கப்பட்டிருக்கின்றனர். இது குறித்து சில பெற்றோர் வைத்தியசாலைக்குச் சென்று கேட்டபோதும் அவர்கள் ஏமாற்றப்பட்டனர். 

மேலும் உடற்தகுதி பரிசோதனைக்கு பாடசாலை நிர்வாகம் ஊடாக மாணவிகள் அனுப்பப்பட்டிருந்தால் கட்டாயம் பெண் ஆசிரியை ஒருவர் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். பெண் ஆசிரியர் அனுப்பப்படவில்லை என அறிய முடிகின்றது. காலையில் பரிசோதனைக்கு சென்றிருந்த மாணவிகள் மாலை வரை திரும்பாமை குறித்தும் பாடசாலை கவனிக்கவில்லை என்பது கவலை அளிக்கின்றது. 

மேற்படி பரிசோதனை கூடம் கீழே உள்ள இரு பகுதியிலே அமைந்திருந்தது. ஆனால் தை 9 ஆம் திகதி பரிசோதனை கூடம் மேல் மாடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகவே இது முன்கூட்டியே திட்டம் இட்டு நடைபெற்றதா என சந்தேகம் எழுந்துள்ளது. அன்று தை 10 ஆம் திகதி விடுமுறை நாள் ஆகும். 

ஆகவே பாடசாலை நிர்வாகமும் இந்த விடயத்தில் மிக காத்திரமாக செயற்பட வேண்டும் இவ்வாறான நிலையில் பாடசாலை இந்த விடயத்தை மூடி மறைக்க முயற்சிக்ககூடாது. பாதிக்கப்பட்ட பிள்ளைகளை பாதுகாப்பது, அதன் பாடசாலையின் பெயரை பாதுகாப்பது மிக முக்கியமானது. அதுபோலவே உயர் பதவிகளில் உள்ள காட்டுமிராண்டிகள் தண்டிக்கப்படுவதும் முக்கியமானது. 

ஆகவே மாணவிகளை பாதுகாத்துக் கொண்டு குறித்த நபருக்கும், பாடசாலை நிர்வாகம் தவறு விட்டிருப்பின் எடுக்கவேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை, ஏனைய நடவடிக்கையையும் எடுப்போம். 

அதற்கான ஒழுங்குகள் செய்யப்படும் அதேவேளையில் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், முல்லைத்தீவு கல்வி வலைய பணிப்பாளர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியான செயற்பாடுகளை உடன் முடிவுக்கு கொண்டுவர அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

முல்லைத்தீவு நிருபர்

No comments:

Post a Comment