மட்டக்களப்பு புனானை ஓமனியாமடு காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை (31) மாலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
ஒமனியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வானம் பிரசாந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 25 ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் ஓமனியாமடு காட்டுப்பகுதியில் தன்னைத்தானே சொட்கண் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன் சொட்கண் துப்பாக்கி ஒன்றையும் சடலத்துக்கு அருகில் இருந்து மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழசை்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment