(எச்.எம்.எம்.பர்ஸான்)
நாட்டில் பெருகி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது அந்த வகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவின் கீழ் உள்ள பகுதிகளில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த தொடராக பல்வேறு முன்னெடுப்புக்கள் நடைபெறுகின்றன.
இவ்வேலைத்திட்டத்தில் ஒரு அங்கமாக பிறைந்துரைச்சேனை பகுதியில் தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் இளைஞர் கழகத்தினர் டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வழிகாட்டலில் இடம்பெற்ற இவ் வேலைத்திட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான எம்.ஏ.நெளசாத், ஏ.எல்.எம் நசீர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment