கொரோனா தொற்றுக்கு உள்ளான சீன பெண் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் - வைத்தியசாலை குழுவினருக்கு நன்றி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

கொரோனா தொற்றுக்கு உள்ளான சீன பெண் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் - வைத்தியசாலை குழுவினருக்கு நன்றி தெரிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து, அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சீனப் பெண் குணமடைந்து இன்று (19) வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த 43 வயதான இப்பெண் சீனாவின் ஹுபேயிலிருந்து ஜனவரி 19ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்தார். 

இந்நிலையில் இவர் காய்ச்சலுக்கு உள்ளான நிலையில், கடந்த ஜனவரி 26ஆம் திகதி ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்த நிலையில் இலங்கையின் பல்வேறு இடங்களுக்கும் சென்றிருந்தார். இவருடன் வந்த குழுவினர் ஏற்கனவே நாட்டை விட்டு சென்றிருந்த நிலையிலேயே அவர் குறித்த வைத்தியசாலையின் தொற்று நோயியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக பிரதான தொற்று நோயியல் நிபுணர், வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

குறித்த பெண்மணி இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சீனாவிற்குச் செல்லவுள்ளதாக தொற்றுநோய் விசேட நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த சீனப் பெண்ணின் உடலிலிருந்து வைரஸ் முற்றாக நீங்கியுள்ளதா என்பது தொடர்பில் அறிவதற்காக போதியளவிலான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தொற்றுநோய் விசேட நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அனைத்து பரிசோதனைகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த பெண்ணின் உடலில் இல்லை என பரிசோதனைகளின் முடிவில் வௌியாகியுள்ளதாகவும் வைத்தியர் சுதத் சமரவீர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கொடை தொற்று நோய் (ஐடிஎச்) வைத்தியசாலையில் 21 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றுவந்த குறித்த பெண், வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு நன்றி தெரிவித்திருந்ததோடு, இலங்கை அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment