தான் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கான இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பணியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்வதற்கான பிடியாணையை பெறுமாறு சட்ட மா அதிபர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment