இரண்டாயிரத்தையும் கடந்த கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு - 2 ஆவது உயிரிழப்பு சம்பவமும் ஹொங்கொங்கில் பதிவு! - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

இரண்டாயிரத்தையும் கடந்த கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு - 2 ஆவது உயிரிழப்பு சம்பவமும் ஹொங்கொங்கில் பதிவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது நேற்றைய புள்ளி விபரங்களின் படி இரண்டாயிரத்தை கடந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. 

சீனாவின் தேசிய சுகாதார ஆணையகத்தின் தகவலின்படி நேற்றைய தினம் சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் 136 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், இதில் கொரோனாவின் மையமான ஹூபே மாகாணத்தில் 132 மரணங்களும் உள்ளடங்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதேவேளை உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மொத்தமாக 75,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2,011 பேர் உயிரிழந்தும் உளளனர். 

சீனாவில் மாத்திரம் நேற்றைய தினம் வரை 2,005 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய நாடுகளில் 6 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது. 

தாய்வான், ஜப்பான், பிரான்ஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் ஒவ்வொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஹொங்கொங்கில் இருவரும் உயிரிழந்துள்ளனர். 

ஹொங்கொங்கில் முன்னதாகவே கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்றைய தினம் ஹொங்கொங்கின் செமியாட்டோனமஸில் அமைந்துள்ள சீனவின் நிதி மையத்தில் தொழில்புரிந்து வந்த நபர் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு உள்ளூர் வைத்தியசாலை ஆணையகம் அறிவித்தது. 

இவ்வாறு உயிரிழந்தவர் 70 வயதுடைய மூதாட்டி ஆவார். பெப்ரவரி 14 ஆம் திகதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டத்தையடுத்து வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டார். 

வுஹானில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸானது தற்போது மொத்தமாக 29 நாடுகளில் பரவியுள்ளது. 

1. சீனா: பாதிப்பு - 74,186 உயிரிழப்பு - 2,005 
2. ஜப்பான்: பாதிப்பு - 76 + 542 (டயமண்ட் பிரின்சஸ் கப்பல்), உயிரிழப்பு - 01 
3. சிங்கப்பூர்: பாதிப்பு - 81 
4. ஹொங்கொங்: பாதிப்பு - 62, உயிரிழப்பு - 02 
5. தாய்லாந்து: பாதிப்பு - 35 
6. அமெரிக்கா: பாதிப்பு - 29 
7. தாய்வான்: பாதிப்பு - 22, உயிரிழப்பு - 01 
8. மலேசியா: பாதிப்பு - 22 
9. வியட்நாம்: பாதிப்பு - 16 
10. ஜேர்மன்: பாதிப்பு - 16 
11. அவுஸ்திரேலியா: பாதிப்பு - 15 
12. பிரான்ஸ்: பாதிப்பு - 12 
13. மாக்கோ: பாதிப்பு - 10 
14. பிரிட்டன்: பாதிப்பு - 09 
15. கனடா: பாதிப்பு - 08 
16. பில்ப்பைன்ஸ்: பாதிப்பு - 03, உயிரிழப்பு - 01 
17. இத்தாலி: பாதிப்பு - 03 
18. இந்தியா: பாதிப்பு - 03 
19. ரஷ்யா: பாதிப்பு - 02 
20. ஸ்பெய்ன்: பாதிப்பு - 02 
21. பெல்ஜியம்: பாதிப்பு - 01 
22. இலங்கை: பாதிப்பு - 01 
23. பின்லாந்து: பாதிப்பு - 01 
24. எகிப்து: பாதிப்பு - 01 
25. கம்போடியா: பாதிப்பு - 01 
26. சுவீடன்: பாதிப்பு - 01 
27. தென்கொரியா: பாதிப்பு - 46 
28. டுபாய்: பாதிப்பு - 09 
29. நேபாள்: பாதிப்பு - 01 

No comments:

Post a Comment