காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் - ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 2, 2020

காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் - ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர்

(நா.தனுஜா) 

காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தல், அதுகுறித்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்தல் மற்றும் இழப்பீடுகளை வழங்குதல் ஆகியவை இடம்பெற வேண்டும் என்றே ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் இலங்கையிடம் வலியுறுத்தி வருகின்றன என்று ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்திருக்கிறார். 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவித்த அவர், 'காணாமல் போனோரின் உறவுகளுக்கான பதிலைப் பெற்றுக் கொடுப்பதற்கான முக்கிய பணியைச் செய்துவரும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினரைச் சந்தித்தேன். இலங்கையில் காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும், அது குறித்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றுமே ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன என்றார்.

No comments:

Post a Comment