கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரியில் வெளவால்களின் மரபணுக்கள் காணப்படுவதாக சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
'கொரோனா எவ்வாறு உருவானது' என்பது குறித்து சீன ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அந்த அறிக்கையில், 'கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 9 நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அதில் வெளவால்களின் மரபணுக்கள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. சார்ஸ் வைரஸின் மரபணுவும் அதில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
வுஹான் மாகாணத்திலுள்ள ஹூவானன் கடல் உணவு சந்தையில் விற்பனை செய்யப்பட்ட வெளவாலில் இருந்தே இந்த வைரஸ் பரவியுள்ளது.
ஆனால், சம்பந்தப்பட்ட 9 பேருமே அந்த சந்தைக்கு சென்றவர்கள் இல்லை. வேறு நபர்கள் மூலம் இவர்களுக்கு பரவியுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment