(இராஜதுரை ஹஷான்)
மக்களாணையினை பெறுவதற்கு கட்சியின் தலைமைத்துவம் அவசியம் அல்ல. மக்களுக்கு சேவையாற்றியிருந்தால் மக்களே ஆட்சியதிகாரத்தை பெற்றுக் கொடுப்பார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பலமான அரசாங்கம் தோற்றம் பெறும். ஒரு இனத்திற்காக மாத்திரம் அரசாங்கம் செயற்படவில்லை அனைத்து மக்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும். தேர்தலை கருத்திற் கொண்டு அரசாங்கம் அபிவித்தி பணிகளை முன்னெடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
புதிய அரசாங்கத்தின் 'கிராமத்திற்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்' என்ற வறிய மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் நேற்று குருணாகலை மாவட்டத்தின் கிரிபாவ என்ற பிரதேசத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் கட்சி தலைமைத்துவத்திற்காக முரண்பட்டுக் கொள்வது அரசியல் வரலாற்றில் இடம்பெறாத ஒரு சம்பவமாகும்.
நான் கட்சி தலைமைத்துவம் ஏதும் இல்லாமலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி கொண்டேன். பாராளுன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதவுடன் பலமான அரசாங்கத்தை தோற்றுவிப்பதே தற்போதைய பிரதான எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment