ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் இன்று - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் இன்று

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணியின் முதலாவது கூட்டம் இன்று (18) இடம்பெறவுள்ளது.

கூட்டனியின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைவமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக கூட்டமைப்பின் பிரதித் தவிசாளர் அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட 10 கட்சிகள் ஒன்றிணைந்து ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு எனும் புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் நேற்று பிற்பகல் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment