உயர்வடைந்து செல்கிறது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,873 பதிவு! - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

உயர்வடைந்து செல்கிறது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,873 பதிவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1,873 ஆக உயர்வடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவரிகளின் தொகையும் 73,335 ஆக பதிவாகியுள்ளது. 

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களில் 12,783 பேர் குணமடைந்தும் உள்ளதுடன், 11,795 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது. 

நேற்று திங்கட்கிழமையன்று நாட்டில் 98 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. 

இதில் 93 இறப்புக்கள் கொரோனாவின் மையமான ஹூபேயில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் வுஹானில் தோற்றம் பெற்ற கொவிட் - 19 என்ற கொரோனா வைரஸானது தற்போது 29 நாடுகளில் பரவியுள்ளது. 

1. சீனா: பாதிப்பு - 72,438, உயிரிழப்பு - 1,868 

2. ஜப்பான்: பாதிப்பு - 66 + 454 (டயமண்ட் பிரின்சஸ் கப்பல்), உயிரிழப்பு - 01 

3. சிங்கப்பூர்: பாதிப்பு - 77 
4. ஹொங்கொங்: பாதிப்பு - 60 
5. தாய்லாந்து: பாதிப்பு - 35 
6. தென்கொரியா: பாதிப்பு - 31 
7. தாய்வான்: பாதிப்பு - 22 
8. மலேசியா: பாதிப்பு - 22 
9. ஜேர்மனி: பாதிப்பு - 16 
10. வியட்நாம்: பாதிப்பு - 
16 11. அமெரிக்கா: பாதிப்பு - 15 
12. அவுஸ்திரேலியா: பாதிப்பு - 15 
13. பிரான்ஸ்: பாதிப்பு - 12 
14. மாக்கோ: பாதிப்பு - 10 
15. டுபாய்: பாதிப்பு - 10 
16. பிரிட்டன்: பாதிப்பு - 09 
17. கனடா: பாதிப்பு - 08 
18. பிலிப்பைன்ஸ்: பாதிப்பு - 03 
19. இந்தியா: பாதிப்பு - 03 
20. இத்தாலி: பாதிப்பு - 03 
21. ரஷ்யா: பாதிப்பு - 02 
22. ஸ்பெய்ன்: பாதிப்பு - 02 
23. பெல்ஜியம்: பாதிப்பு - 01 
24. இலங்கை: பாதிப்பு - 01 
25. பின்லாந்து: பாதிப்பு - 01 
26. எகிப்த் : பாதிப்பு - 01 
27. கம்போடியா: பாதிப்பு - 01 
28. சுவீடன்: பாதிப்பு - 01 29. நேபாள் : பாதிப்பு - 01

No comments:

Post a Comment