உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவு தொடர்ந்தால் மக்களுக்கு அதன் பலன்களை வழங்குவோம் : அமைச்சர் செஹான் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 15, 2020

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவு தொடர்ந்தால் மக்களுக்கு அதன் பலன்களை வழங்குவோம் : அமைச்சர் செஹான்

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைந்துள்ளது இது ஒரு குறுகிய காலநிலை மாத்திரமே அதன் நிலை தொடருமானால் எரிபொருட்களின் விலைகளில் நிச்சயம் விலை குறைப்பை மேற்கொள்வோம் என அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்ட இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். 

இது குறித்தும் இராஜாங்க அமைச்சர் தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில், உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைந்துள்ளது எனினும் அது இலங்கையில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு போதுமானதாக இல்லை. 

சீனாவில் ஏற்பட்டுள்ள வைரஸ் தாக்கம் நிலைமை காரணமாக எரிபொருட்களின் கேள்வி குறைந்துள்ள நிலையில் விலையிலும் வீழ்ச்சி காணப்படுகிறது. எரிபொருட்களின் விலைகளில் தொடர்ந்தும் இந்நிலைமை தொடர்ந்தால் அதன் பலனை நாட்டு மக்களுக்கு வழங்குவோம். 

கடந்த மாதங்களில் மசகு எண்ணையின் விலை அதிகரித்த போது இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்க கூடிய தேவை இருந்தது எனினும் விலை அதிகரிப்பை மேற்கொள்ளவில்லை. 

தற்போது மசகு எண்ணெய் முழுமையாக விலை குறையவில்லை இது ஒரு குறுகிய கால நிலை மாத்திரமே. இதனால் எரிபொருளில் விலை குறைப்பை ஏற்படுத்த முடியாது உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment