சீனாவில் இருக்கும் தொழில் நிறுவனம் ஒன்றில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் உபகரணமொன்றை தயாரித்து வைத்துள்ளனர்.
குறித்த உபரகணமானது சுரங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதில் உள் நுழைவோரின் மேனிகளில் கிருமிநானியை தெளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சீனாவில் மக்கள் படிப்படியாக பணிகளுக்கு திரும்பிக் கொண்டுடிருக்கும் நிலையில் இவ்வாறான நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையிலேயே இவ்வாறான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் வாயிலில் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளதோடு, சென்சர் பயன்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாவும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பொதுமக்கள் தொழிலுக்கு அச்சத்தை விடுத்து பணிகளுக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் புத்தாண்டை முன்னிட்டு நீடிக்கப்பட்டுள்ள விடுமுறையை தொடர்ந்து, கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாகவும் மக்கள் பணிகளுக்கு செல்லமால் தனது வீடுகளில் இருந்தனர். இந்நிலையில் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு பணிகளுக்கு திரும்புகின்றனர்.
அதேவளை சீனாவில் தற்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையானது 66,000 மேல் உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் தொகையும் 1,523 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களில் 10,608 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன், 7,099 பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment