விடுமுறை நாட்களையொட்டி கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை விசேட ரயில் சேவை - News View

About Us

About Us

Breaking

Friday, February 14, 2020

விடுமுறை நாட்களையொட்டி கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை விசேட ரயில் சேவை

விடுமுறை நாட்களையொட்டி இம் மாதம் 20 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை விசேட ரயில் சேவையை நடத்த ரயில்வே திணைக்களம் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு கோட்டை - பதுளை மற்றும் பதுளை - கொழும்பு கோட்டை ஆகிய பிரதேசங்களுக்கிடையில் விசேட ரயில் சேவை நடத்தப்படும்.

இக்காலப்பகுதியில் மட்டும் தினமும் இலக்கம் 01 எனக் குறிப்பிடப்படும் ரயில் இரவு 7.35 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 4.50 மணிக்கு பதுளை ரயில் நிலையத்தை சென்றடையும்.

அதேபோன்று இலக்கம் 02 எனக் குறிப்பிடப்பட்டுள்ள ரயில் இரவு 8.30 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 5.27 மணியளவில் கொழும்பு கோட்டை நிலையத்தை வந்தடையும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment