100 மில்லியன் ரூபா பெறுமதியான 14 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, February 14, 2020

100 மில்லியன் ரூபா பெறுமதியான 14 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது

யாழ். மாதகல் பகுதியில் சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான 14.35 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். இக்கைது நேற்று (14) இடம்பெற்றுள்ளது.

மாதகல் கடல் பகுதியில் வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், சந்தேகத்திற்கிடமான டிங்கிப் படகொன்றை அவதானித்து வழிமறித்துச் சோதனையிட்டுள்ளனர். 

இதன்போது படகிலிருந்து தங்கத்தைக் கண்டுபிடித்துள்ளதோடு, படகிலிருந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள தங்கம் மற்றும் டிங்கிப் படகு மேலதிக நடவடிக்கைகளுக்காக காங்கேசந்துறை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment