புதிய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை கொண்டு செல்ல பலமான பாராளுமன்றமொன்று அவசியமாகும். நாட்டை வெளிநாடுகளுக்கு கூறுபோட்ட அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி மக்களுக்கு வழங்கியிருக்கும் பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுக்கையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், மார்ச் மாதம் முதலாம் திகதி நள்ளிரவுடன் சமகால பாராளுமன்றத்துக்கு நான்கரை வருடங்கள் நிறைவடைகின்றன. மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் அன்றைய தினம் நள்ளிரவே பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திடுவார்.
புதிய பாராளுமன்றத்தை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு மீண்டும் மக்கள் கைகளிலேயே ஒப்படைக்கப்படும். சமகால பாராளுமன்றம் குழப்பங்கள் நிறைந்ததோர் பாராளுமன்றமாகும். நாட்டை கட்டியெழுப்ப சக்தி வாய்ந்த பாராளுமன்றமொன்று அவசியமாகும்.
நாட்டையும் தேசிய பொருளாதாரத்தையும் அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை கடந்த இரண்டரை மாதக் காலப்பகுதியில் இட்டுள்ளோம். படித்த இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்பளிக்கும் மற்றும் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் சக்தி வாய்ந்த பயணமொன்றுக்கான பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் இலக்குகளை அடைந்து கொள்ள பலமான பாராளுமன்றம் அவசியமாகும். நாட்டின் சுயாதீனம், வெளிநாடுகளுக்கு அடிப்பணியாத பொறிமுறையொன்று அவசியமாகும்.
நாட்டை வெளிநாடுகளுக்கு கூறுபோட்ட அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்களுக்கு இந்த பொன்னான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். மக்கள் வழங்கிய வாக்குறுதியின் எதிரொலிகள் சிறிகொத்தவின் உள்ளே மோதல்களாக மாறியுள்ளன என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment