சந்தேகநபர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த கஞ்சிப்பானை - News View

About Us

About Us

Breaking

Saturday, February 1, 2020

சந்தேகநபர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த கஞ்சிப்பானை

பிரமுகர் கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மற்றுமொரு சந்தேகநபர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பிரமுகர் கொலைத்திட்டம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உதேசிக வீரதுங்கவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் கஞ்சிப்பானை இம்ரான் என்பவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவரின் சட்டத்தரணி நீதவானுக்கு அறிவித்துள்ளார்.

சந்தேகநபரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியதாக சட்டத்தரணிகள் தெரிவித்ததன் பிரகாரம், அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன சிறைச்சாலை ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்டு மகர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment