பகிடிவதை என்னும் பெயரில் பல்கலைக்கழகங்கள் சித்திரவதை கூடங்களாகிவிட்டது - சிவமோகன் எம்.பி. - News View

Breaking

Post Top Ad

Monday, February 17, 2020

பகிடிவதை என்னும் பெயரில் பல்கலைக்கழகங்கள் சித்திரவதை கூடங்களாகிவிட்டது - சிவமோகன் எம்.பி.

தமிழர் கலாசாரத்தை சீர்குலைக்கும் பகிடிவதை நிறுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சிவமோகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பெற்றோர்கள் பிள்ளைகளின் வாழ்வில் அக்கறைகொண்டு எவ்வளவோ கஷ்டப்பட்டு பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகிறார்கள். 

மாணவர்கள் தாங்கள் எதற்காக வந்தார்களோ அதை மறந்து விடுகிறார்கள். பகிடிவதை என்னும் பெயரில் பல்கலைக்கழகங்கள் சித்திரவதை கூடங்களாகிவிட்டது. 

தமிழ் மாணவர்களால் மேற்கொள்ளப்படும் பகிடிவதை சித்திரவதைகளால் தற்கொலைகள் கூட நிகழ்ந்துள்ளது. இந்த செயற்பாடானது பெரும்பான்மை சிங்களவர் முன்னிலையில் தலை குனிவை ஏற்படுத்துகிறது.

எமது கலாசாரத்தில் மென்மையான செயற்பாடுகளை கொண்ட பெண்கள் கல்வியால் முன்னேற்றமடைந்து வருகிறார்கள். அவர்களது முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் அவர்களுக்கு எதிராக செய்யப்படுகின்ற வன்முறைகளை மன்னிக்க முடியாது என்றார்.

முல்லைத்தீவு நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad