மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவராக சட்டத்தரணி உவைஸ் தெரிவு - News View

Breaking

Post Top Ad

Sunday, February 16, 2020

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவராக சட்டத்தரணி உவைஸ் தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர்களில் ஒருவராக சட்டத்தரணி ஏ.உவைஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டத்தின் போதே இவர் உப தலைவராக செய்யப்பட்டார்

சட்டத்தரணி உவைஸ் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக கடந்த நான்கு வருடங்களாக இருந்துள்ளதுடன் நூலக பொறுப்பாளராகவும் இருந்துள்ளார்.

இச்சங்கத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இச்சங்கத்தின் உப தலைவர்களில் ஒருவராக சட்டத்தரணி எம்.லத்தீபும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி உவைஸ் சிறந்த மார்க்க பின்னணியுள்ளவரும், சமூக செயற்பாட்டாளரும் மனிதாபிமான செயற்பாட்டாளருமாவார்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜூம்ஆப் பள்ளிவாயல் உட்பட பல் வேறு நிறுவனங்களின் அங்கத்தராகவும் சட்ட ஆலோசகராகவும் இருந்து வருகின்றார்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment

Post Bottom Ad