பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, February 16, 2020

பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நாளை மறுதினம் (18) பிற்பகல் 2 மணிக்கு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு சத்துர சேனாரத்னவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரை 54 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் அரசியல் பிரமுகர்கள், பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏப்லர் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad