விளையாட்டு அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட தேசிய முஅய்தாய் சங்கத்தினால் (Muaythai Association of Sri Lanka) வருடாந்தம் தேசிய மட்டத்தில் நடாத்தி வரும் தேசிய முஆய்தாய் சம்பியன்ஷிப் போட்டியின் இவ்வருடத்துக்கானதும், 3வதுமான போட்டி சுகததாச உள்ளக விளையாட்டறங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இம்மாதம் 08, 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெற்ற இப்போட்டி நிகழ்ச்சியில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இராணுவப்படை மற்றும் கடற்பரடை வீரர்களின் அணி உற்பட பல கழகங்களிலிருந்தும் 500 இக்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இப்போட்டியில் மாவனல்லை, கெலிஓய மற்றும் நாவலப்பிடியைத் தளமாகக் கொண்டு இயங்கும் IMA
- Iron Muaythai Academy என்ற கழக வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் சுமார் 76 ஐ பெற்று சம்பியன் வெற்றிக் கிண்ணத்தை வென்றெடுத்தது.
சென்ற வருடம் (2019) திகனையில் நடைபெற்ற இரண்டாவது முஅய்தாய் தேசிய சம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்ற IMA கழகத்தின் இம் முன்னேற்றத்துக்குக் காரணகருத்தாவாக செயற்பட்டவர் மடவளையைச் சேர்ந்த மாஸ்டர எம்.எச்.எம் பாஹித் என்பதை இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டியுள்ளது.
கடந்த 06 மாத காலமாக இரவு பகல் பாராது மாணவர்களுக்கு கடுமையான பயிற்சியை அழித்து வெற்றிக் கிண்ணத்தை பெறும் அளவு IMA மாணவர்களை நகர்த்திச் சென்றார். அவரின் கடுமையான உழைப்பு, தியாகம், மாணவர்களுக்கான அன்பான வழிகாட்டால்களினூடாவே அதனைச் சாத்தியப்படுத்த முடிந்தது.
அத்தோடு மாஸ்டர் பாஹித்துக்கு உருதுணையாக நின்று நாவலப்பிட்டிய கிளையில் பயிச்சியளித்து வெற்றிக்கு உதவிய மாஸ்டர் சமன் ஜயலத்தினதும் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாகும்.
தங்கம் - 24, வெள்ளி - 29, வெண்கலம் - 23 இனையும் பெற ஒத்துழைத்த பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் IMA கழகம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment