திருத்தங்களுக்குட்பட்டு வந்த தேசிய சம்பளங்கள், ஆளணி ஆணைக்குழு இரத்து, புதிய தேசிய சம்பள ஆணைக்குழு நியமனம் - வர்த்தமானியும் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Saturday, February 15, 2020

திருத்தங்களுக்குட்பட்டு வந்த தேசிய சம்பளங்கள், ஆளணி ஆணைக்குழு இரத்து, புதிய தேசிய சம்பள ஆணைக்குழு நியமனம் - வர்த்தமானியும் வெளியீடு

தேசிய சம்பளக் கொள்கையொன்றை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கும் உதவுவதற்கும் தேசிய சம்பள ஆணைக்குழுவொன்று தாபிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி அவ்வப்போது திருத்தங்களுக்குட்பட்டு வந்த தேசிய சம்பளங்கள் மற்றும் ஆளணி ஆணைக்குழு இரத்து செய்யப்பட்டுள்ளது.

புதிய ஆணைக்குழுவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (14) நள்ளிரவு வெளியிடப்பட்டது.

அரச மற்றும் தனியார் துறைகளின் சம்பளங்கள் மற்றும் வேதனங்களின் பேண்தகைமையை தொடர்ச்சியாக பேணுவதற்காக அத்துறைகளின் சம்பளங்கள் உள்ளிட்ட அனைத்து ஊதிய கட்டமைப்புக்களையும் மீளாய்வு செய்து, அரச துறையிலும் தனியார் துறையிலும் தொழிற்படை தேவைக்கேற்ப இதனை மேற்கொள்வது இதன் நோக்கமாகும்.

திரு.உபாலி விஜேவீரவின் தலைமையிலான இவ் ஆணைக்குழு 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

சந்திராணி சேனாரத்ன, கோட்டாபய ஜயரட்ன, சுஜாதா குரே, மதுரா வேஹேல்ல, எம்.எஸ்.டி.ரணசிறி, வைத்தியர் ஆனந்த ஹப்புகொட, உயர் நீதிமன்ற நீதியரசர் சஞ்ஜீவ சோமரத்ன, அஜித் நயனகாந்த, ரவி லியனகே, சரத் எதிரிவீர, பேராசியர் ரஞ்சித் சேனாரத்ன, பொறியலாளர் ஆர்.எம்.அமரசேகர மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஸ்ரீ ரணவீர, டப்ளியு.எம்.பியதாச ஆகியோர் இவ் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மக்கள் நேய அரச சேவை ஒன்றை கட்டியெழுப்புவதற்கான அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்துவதற்காக சேவை தேவைக்கேற்ப மனித வளங்களை பயன்படுத்தும் நீண்ட கால திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகள், எதிர்பார்ப்புக்களை அடைந்துகொள்ளும் நடவடிக்கைகளில் தனியார் துறையையும் அந்நடவடிக்கைகளில் பங்காளர்களாக ஆக்கிக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தி, அரச சேவைகளை வினைத்திறனாக திட்டமிட்டும் அபிவிருத்தி நடவடிக்கைகளை இலகுபடுத்தி, தேவையானபோது ஒழுங்கு விதிகளுக்கு ஏற்ப பொறுப்புக்களை வினைத்திறனாக நிறைவேற்றக்கூடிய திறன்கொண்ட ஊழியர்களை அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது அரசாங்கத்தின் கொள்கையாகும்.

பயனுறுதி வாய்ந்த அரச சேவையொன்றை பேணுவதற்கு ஏற்றவகையில் சம்பளங்கள் மற்றும் பல்வேறு வசதிகள் உள்ளிட்ட முன்மொழிவொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இந்த புதிய ஆணைக்குழுவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (14) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன் விபரங்களை அறிந்து கொள்வதற்கு பின்வரும் வர்த்தமானி link ஜ கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment