சீனாவில் உள்ள சிறைச்சாலைகளில் வேகமாக பரவும் கொரோனா வைரஸால் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவிலுள்ள சிறைச்சாலைகளில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது.
அந்த வகையில், கொரோனா வைரஸின் பிறப்பிடமான ஹுபெய் மாகாணத்திலுள்ள சிறைச்சாலைகளில் 271 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஷான்டாங் மாகாணத்தின் ரெஞ்செங் சிறையில் 7 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 200 கைதிகள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இதேவேளை, ஜெஜியாங் மாகாணத்தின் ஷிலிபெங் சிறையில் 34 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹுபெய் மாகாணத்திலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறைப்படுத்தப்பட்டுள்ள இளங்குற்றவாளி ஒருவருக்கும் வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு வைரஸ் பாதிப்புக்குள்ளான கைதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைகளில் கொரோனா வேகமாக பரவியதைத் தொடர்ந்து வைரஸ் பாதிப்பில் கவனக்குறைவாக இருந்த 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment