மோட்டார்‌ சைக்கிளில்‌ வந்தவர்கள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய நபர் பலி - News View

Breaking

Post Top Ad

Monday, February 17, 2020

மோட்டார்‌ சைக்கிளில்‌ வந்தவர்கள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய நபர் பலி

அஹுங்கல்ல, வெலிவத்துகொடை பிதேசத்தில்‌ இன்று (17) காலை 6.50 மணியளவில்‌ இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலப்பிட்டிய பிரதேசத்தில்‌ மோட்டார்‌ சைக்கிளில்‌ வருகை தந்த அடையாளம்‌ தெரியாத சந்தேகநபர்கள்‌ இருவரினால்‌ குறித்த நபர் மீது துப்பாக்கிப்‌ பிரயோகம்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச்‌ சென்றுள்ளனர்‌.

துப்பாக்கிப்‌ பிரயோகத்தில்‌ காயமடைந்தவர்‌ பலப்பிட்டிய வைத்தியசாலையில்‌ அனுமதிக்கப்பட்ட பின்னர்‌ உயிர்ிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

36 வயதுடைய வெலிவத்துகொடை, பலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு, துப்பாக்கி பிரயோகம்‌ நடாத்தியதற்கான காரணம்‌ மற்றும்‌ சந்தேகநபர்கள்‌ சம்பந்தமாக இதுரையில்‌ எவ்வித தகவலும்‌ தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிசார்‌ மேற்கொண்டு வருகின்றனர்‌.

No comments:

Post a Comment

Post Bottom Ad