அரச ஊழியர்களுக்கு மாதாந்த கட்டணத்தில் புதிய வீடுகள் - விண்ணப்பங்கள் மார்ச் 20 வரை ஏற்றுக் கொள்ளப்படும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

அரச ஊழியர்களுக்கு மாதாந்த கட்டணத்தில் புதிய வீடுகள் - விண்ணப்பங்கள் மார்ச் 20 வரை ஏற்றுக் கொள்ளப்படும்

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் உள்ள நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையால் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர், மொரட்டுவை லுனாவையில் ஆரம்பிக்கப்பட்ட தொடர்மாடி வீடமைப்புத் திட்டம் முடிவடைந்துள்ளது. 

ஒவ்வொன்றும் 41 இலட்சம் பெறுமதியான இவ்வீடுகள் தற்போது அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ளன. இவ்வீடுகளை பார்வையிடுவதற்காக நேற்று (18) வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுரத்த அங்கு விஜயம் மேற்கொண்டார்.

10-25 வருடங்கள் மாதாந்தம் செலுத்தக் கூடிய வகையில் முதற்கட்டமாக 25 வீதத்தைச் செலுத்தி அரசாங்க ஊழியர்கள் இவ்வீடுகளைப் பெறமுடியும்.

இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 20 வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது. அமைச்சர் விமல் வீரவன்ச இதற்கு முன்னர் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது இவ்வீடுகளை நிர்மாணித்தமை குறிப்பிடத்தக்கது. இங்கு 358 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

(தெஹிவளை, கல்கிஸ்ஸை விஷேட நிருபர்)

No comments:

Post a Comment