கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக ஆளுநரிடம் தவிசாளர் விசேட வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக ஆளுநரிடம் தவிசாளர் விசேட வேண்டுகோள்

எஸ்.எம்.எஎம்.முர்ஷித்

கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யகம்பத் தலைமையில் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் ஆளுனரினால் உள்ளுராட்சி மன்றங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. 

இக்கலந்துரையாடலில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மியினால் பிரதேச சபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் ஆக்குவது தொடர்பான மகஜர் ஒன்றும் முன்வைக்கப்பட்டு குறித்த ஊழியர்களின் நிலைமை தொடர்பாக ஆளுனரிடம் எடுத்துக்கூறி அவர்கள் குறைந்த சம்பளத்துடன் அர்ப்பணிப்புடன் வேலை செய்வது, சபையின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதனால் ஊழியர்களுக்கு உரிய முறையில் சம்பளம் வழங்க முடியாமை தொடர்பாகவும், குறித்த ஊழியர்களை நிரந்தரம் ஆக்குவதன் மூலம் சபையின் நிதி நிலைமை சீராக்குவதுடன் ஊழியர்களினது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பது தொடர்பாகவும் தவிசாளரினால் கூறப்பட்டது.

கௌரவ தவிசாளரின் கோரிக்கைக்கு அமைய தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் உடனடியாக முன்னெடுப்பதாகவும் அதற்கான நிருவாக செயன்முறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவனை செய்வதாகவும் ஆளுனரினால் தவிசாளரிடம் உறுதியளிக்கப்பட்டது.

தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் ஆக்குவது தொடர்பாக ஏற்கனவே பதவி வகித்த ஆளுநர்களிடமும் கௌரவ தவிசாளரினால் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் உதவித் தவிசாளர் யூ.எல்.அஹ்மட் லெப்பையும் கலந்து கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment