டிப்பர் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி - News View

About Us

About Us

Breaking

Monday, January 20, 2020

டிப்பர் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி

(எச்.எம்.எம்.பர்ஸான்)
துவிச்சக்கர வண்டியில் சென்றவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான சோகச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவலடி பகுதியில் வைத்து இடம்பெற்ற விபத்திலேயே குறித்த நபர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஓட்டமாவடி - மீராவோடை பகுதியில் வசித்து வந்த நபரொருவர் நாவலடிக்கு துவிச்சக்கர வண்டில் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது பிரதான வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளானவரை சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவரின் உடல் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் மையைவாடியில் நேற்று முன்தினம் இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

மரணமடைந்த குறித்த நபர் டிப்பர் விபத்திலும் சிக்கி உயிர் பிழைத்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment