பாறுக் ஷிஹான்
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவும் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வும் சனிக்கிழமை (18) மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணிவரை சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றன.
மன்றத்தின் தலைவர் அஸ்வான் ஷக்காப் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் கைத்தொழில் அபிவிருத்தி, ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், தேசிய காங்கிரஸ் பிரதித் தலைவர் டொக்டர் ஏ.உதுமாலெப்பை, கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த,உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் உள்ளிட்டோர் விசேட அதிதிகளாகவும் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.பீர்முஹம்மத், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாக கலந்து கலந்து கொண்டனர்.
இதன்போது சமூக சேவைஇ கல்வி, கலை, கலாசார,இலக்கியத் துறைகளுக்கு ஆற்றி வருகின்ற பணிகளுக்காக துறைசார் பிரமுகர்கள் சிலர், மர்ஹூம் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
No comments:
Post a Comment