முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் முயற்சியால் காத்தான்குடி மட்/மம/மெத்தைப் பள்ளி வித்தியாலயத்திற்கு ஒரு கோடி ஐம்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆராதனை மண்டபத்திடனுடனான புதிய 3 மாடிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதனையிட்டு பெற்றோர் சமூகம் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி மட்/மம/மெத்தைப் பள்ளி வித்தியாலயத்தினைப் பொறுத்த மட்டில் நிலப்பற்றாக்குறை மற்றும் கல்வி கற்க சேர்கின்ற மாணவர்களின் தொகை அதிகரித்துக் கொண்டு செல்வதற்கேற்ப அதனுடைய பெளதீக வளங்களை அபிவிருத்தி செய்ய வேண்டிய ஒரு தேவைப்பாடு காணப்படுகின்றது.
அந்த வகையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக பாடசாலைக்கான மூன்று மாடிக் கட்டிடத்தை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன் முதற்கட்டமாக ஒரு கோடி பத்து லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதனுடைய பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன.
இருப்பினும் அங்கு குறிப்பிட்டளவு பூச்சு வேலைகள், ஆய்வு கூடங்களை அமைத்தல், விஷேடமாக மலசல கூடங்கள் அமைத்தல் மற்றும் ஆராதானை மண்டபத்திற்கான மேடை அமைப்பதற்கான செலவீனங்களை (அதற்கான நிதியினை) மாகாண சபையினால் PSDG நிதியினூடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்பொழுது முற்று முழுதாக கட்டிடம் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மிக நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த காத்தான்குடி மட்/மம/மெத்தைப் பள்ளி வித்தியாலயத்திற்கான ஓர் மூன்று மாடிக் கட்டிடம் தற்பொழுது பூரணமாக நிறைவு செய்யப்பட்டு மாணவ சமூகத்தினரின் பாவனைக்காக மிக விரைவாக கையளிக்கப்படவுள்ளன.
அந்த வகையில் அழகிய ஆராதனை மண்டபத்திடனுடனான 3 மாடிக் கட்டிடத்தினை பாடசாலைக்கு பெற்றுத்தந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுக்கு அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், மாணவ, பெற்றோர் சமூகம் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்களது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.














No comments:
Post a Comment