ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மரணம் அதிர்ச்சியையும், கவலையையும் தருகிறது - பைசல் காசிம் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2020

ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மரணம் அதிர்ச்சியையும், கவலையையும் தருகிறது - பைசல் காசிம் எம்.பி

தனது கம்பீரக் குரலால் தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரையும் கட்டிப்போட்ட பிரபல வானொலி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் மரணம் அதிர்ச்சியையும் கவலையையும் தருவதாக முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் எம்.பி தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு.

அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். நீண்ட காலமாக ஊடகத் துறையில் தனக்கென ஓர் நிறைந்த இடத்தைப் பிடித்திருந்த அவர் இன்று எம்மை விட்டு நிரந்தரமாக விடை பெற்றுச் சென்றுள்ளார்.

அவரது இழப்பு தமிழ் பேசும் சமூகத்துக்கும் ஊடகத் துறைக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அவர் சிறந்த அறிவிப்பாளராகவும் - சிறந்த ஆசிரியராகவும் - பொது அறிவிப் பெட்டகமாகவும் திகழ்ந்தார். அவருக்கென்றொரு ரசிகர் பட்டாளம் இன்றும் உண்டு. அவர் ஊடகத் துறைக்கு மிகச் சிறந்த பணியாற்றிச் சென்றுள்ளார்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறப்பானதாக அமைய வேண்டும். அவருக்கு அல்லாஹ் உயர்ந்த சுவர்க்கத்தைக் கொடுக்க வேண்டும் என்று நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

அவரது பாவங்களை மன்னித்து அல்லாஹ் அவருக்கு நிரந்தர சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என்று நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்வோமாக எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment