கொழும்பு நகரம் மற்றும் சுற்றுப்புறத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் சூழல் நட்பியலுடன் கூடிய மின்னில் இயங்கும் டிரம்ப் கார் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சீன நிறுவனம் இதை அறிமுகப்படுத்தவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் முதலாவது கட்டம் கொட்டாவையிலிருந்து புறக்கோட்டை வரை அமையுமென, சீன ரயில்வே குழும நிறுவனப் பிரதிநிதிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைலெவல் வீதியின் 14 அடி உயரமான தண்டவாளத்தில் ஓடும் இந்த டிராம் வண்டிகள் ஒவ்வொன்றிலும் 8 முதல் 11 பயணிகள் வரை பயணிக்க முடியும். முழுமையாக சீன முதலீட்டுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டம் இன்னும் ஒன்றரை வருட காலத்தில் முழுமை பெறவுள்ளது.
இந்த டிராம் கார் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் செயலாளர் காமினி செனவிரட்னவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

No comments:
Post a Comment