காலஞ்சென்ற சிரேஷ்ட அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் ஜனாசா இன்று (21) மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
சிரேஷ்ட அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான அல்.ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களது ஜனாஸா சாய்ந்தமருது உஸ்மான் வீதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் இன்று பிற்பகல் (மஃரிப் தொழுகையின் பின்னர்) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு உயிரிழந்த அன்னாரின் ஜனாசா, இன்று (21) அதிகாலை 2.30 மணியளவில் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து பாணந்துறை, கொஸல்வத்தையில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
பாணந்துறை பொதுசேவா மாவத்தையிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் ஜனாசா அங்கிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் கல்முனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவரது மகனான எம்.ஜே.எம். மின்ஹாஜ் தெரிவித்தார்.
60 வயதான அன்னார் இலங்கை ஊடகத்துறையில் மிக நீண்ட காலம் சேவையாற்றிய ஒருவராவார்.
இவர் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பளாராக திகழ்ந்ததோடு ஆசிரியராக, அதிபராக என்று கல்வித்துறையிலும் சேவையாற்றியுள்ளார்.
பல பாடசாலைகளில் அதிபராக சேவையாற்றிய அன்னார், இறுதியாகக் களுத்துறை முஸ்ஸிம் மகா வித்தியாலய அதிபராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment