நாயொன்றை கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில், விலங்குப் பண்ணை காவலர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொபைகனே எனும் இடத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். கொபைகனே, ஹெங்கமுவ பிரதேசத்தில் குறித்த விலங்குப் பண்ணை அமைந்துள்ளது.
குறித்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் (19) துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், நிக்கவெரட்டிய நீதிமன்றத்தில் சந்தேகநபரை நேற்று (20) முன்னிலைப்படுத்தியபோது, அவரை எதிர்வரும் பெப்ரவரி 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒளிப்பதிவொன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டமை தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment