பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகர மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சிலாபம் நீதிமன்றத்தினால் இன்றையதினம் (21) குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
ஜக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மீது, சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 2004ஆம் ஆண்டு, வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு தொடர்பில் 2011 மார்ச் மாதம் பிணை வழங்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அவருக்கு பிணை நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் குறித்த பிணை நிபந்தனையை இரு முறை மீறியதாக தெரிவித்து, கடந்த வருடம் ஒக்டோபர் 10ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் கடந்த 3 மாதங்களாக விளக்கமறியல் வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment