கழிவு மீன் ஏற்றி வந்த லொறி தலைகீழாக மன்னார் பாலத்தில் விபத்து - சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2020

கழிவு மீன் ஏற்றி வந்த லொறி தலைகீழாக மன்னார் பாலத்தில் விபத்து - சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு கழிவு மீன்களை ஏற்றி வந்த கூலர் வாகனம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (21) அதிகாலை மன்னார் பிரதான பாலத்தில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தின் போது காயமடைந்த குறித்த வாகனத்தின் சாரதி உடனடியாக மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று (20) இரவு மீன் கழிவுகளை ஏற்றிக் கொண்டு மன்னார் நோக்கி குறித்த கூலர் வாகனம் பயணித்துள்ளது. குறித்த வாகனத்தில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த மீன் கழிவுகள் கோழித்தீன் தாயரிப்பதற்காக மன்னார், தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள தொழிற்சாலைக்கு கொண்டு செல்லும் வகையில் கொண்டு வரப்பட்டதாக தெரிய வருகின்றது.
இதன்போது மன்னார் பிரதான பாலத்தீனுடாக பயணித்த குறித்த கூலர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் ஓரத்தில் காணப்பட்ட 5 தடைகளை உடைத்து வீதியை வீட்டு பாய்ந்து மீண்டும் வந்த திசையை நோக்கி தலைகீழாக புரண்டுள்ளது.

இதன்போது குறித்த வாகனத்தின் சாரதி மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த கூலர் வாகனம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் நிருபர் - எஸ். றொசேரியன் லெம்பேட்)

No comments:

Post a Comment