றிபாஸ் அபூபக்கர்
நாட்டில் மிகக்கொடிய நோயாக உருவெடுத்துள்ள டெங்கு நோயின் தாக்கம் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்து வருவதுடன், பெறுமதியான உயிர்களையும் காவு கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது.
இக்கொடிய நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறும் நோக்கில் டெங்கு நோயை உண்டாகும் நுளம்புகள் உருவாகும் இடங்களைத்தேடி துப்புரவு செய்து அதன் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேசத்திற்குட்பட்ட மாஞ்சோலை ஹிழ்றிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் டெங்கொழிப்பு சிரமதான நிகழ்வொன்று மாஞ்சோலை பிரதேசத்திற்குட்பட்ட பொது இடங்களில் அண்மையில் இடம்பெற்றது.
இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டவர்களை ஊக்குவிக்கும்முகமாக உள்ளூர் தனவந்தர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற உதவி மூலம் கொள்வனவு செய்யப்பட்ட உலருணவுப் பொதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பள்ளிவாயலின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் காஸிமி தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment