டில்லி மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன்மார் குப்தா தாக்கல் செய்த புதிய மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
அந்த மனுவில், கடந்த 2012ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடைபெற்றபோது தாம் சிறுவனாக இருந்ததாகவும், தனக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரைக் கொண்ட அமர்வு இன்று விசாரிக்கவுள்ளது.
ஏற்கெனவே பவன்மார் குப்தாவின் மனுவை டில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து இந்தப் புதிய மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
நிர்பயா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கின் குற்றவாளிகளான வினய் சர்மா, முகேஷ் மார், அக்ஷய்மார் சிங், பவன்குமார் குப்தா ஆகிய நால்வருக்கும் எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி காலை 6 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுமாறு டில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், பவன் குமார் குப்தா, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
இதுபோன்ற மனுவை ஏற்கெனவே அவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 19ஆம் திகதி நிராகரித்துவிட்டது. அப்போது, பவன்குமார் தரப்பு போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்ததாகக் கூறி அவருக்கு உயர் நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது.
தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பவன்குமார் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவிலும், குற்றச் சம்பவம் நடந்தபோது தாம் சிறுவனாக இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி தள்ளுபடி செய்துவிட்டது. இந்த விவரங்களையும் டில்லி உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.
No comments:
Post a Comment