5,000 ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2020

5,000 ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது

மொரட்டுவை பிரதேசத்திலுள்ள நபர் ஒருவரிடம் ரூபா 5,000 பணத்தை பெற்ற குற்றச்சாட்டில், குடிவரவு, குடியகல்வு அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரின் மகளின் இரட்டை பிரஜாவுரிமை பெறுவது தொடர்பான அறிக்கை, ஆவணங்களை தயாரித்து தருவதற்கும் அதனை விரைவுபடுத்துவதற்குமாக, அரச முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் ரூபா 5,000 பணம் கோரியுள்ளார்.

நேற்றையதினம் (20) குறித்த நபர் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் வைத்து இவ்வாறு இலஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளரும், சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகருமமான ஜயந்தா பத்திமினி தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று (21) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment