பொதுமக்கள் பிரச்சினைகளை இலகுவாக அணுக புதிய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு பிரதமரினால் ஆரம்பித்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 4, 2019

பொதுமக்கள் பிரச்சினைகளை இலகுவாக அணுக புதிய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு பிரதமரினால் ஆரம்பித்து வைப்பு

பொதுமக்கள் பிரச்சினைகளை இலகுவாக அணுகுவதற்கென புதிய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவொன்றை பிரதமர் மஹிந்த ராஜபஷ ஆரம்பித்து வைத்தார். 

அலரி மாளிகைக்கு அருகே ஆர்.ஏ, டிமெல் மாவத்தையில் இலக்கம் 101 இல் இப்புதிய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு நேற்று (03) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

இதற்கமைய பிரச்சினைகள் தொடர்பில் எவரொருவரும் இப்புதிய அலுவலகத்துக்கு நேரில் வந்து முறையிட முடியும். முறைப்பாடு செய்யப்படும் பிரச்சினைக்கமைய அங்குள்ள அதிகாரிகள் அதனை ஆராய்ந்து தீர்வு காணும் பொருட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதனை சமர்பிப்பதுடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதா? இல்லையா? அப்படியானால் அதற்குரிய தீர்வு என்ன என்பது தொடர்பில் தொடர்ந்து ஆராயுமென்றும் பிரதமர் கூறினார். 

மக்கள் பிரச்சினைகளின்றி வெற்றியோடு இருக்க வேண்டும் என்பதே இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டதன் பிரதான நோக்கமென்றும் பிரதமர் இத்திறப்பு விழாவின்போது தெரிவித்தார். 

தினந்தோறும் பெரும் எண்ணிக்கையான மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறுகோரி பிரதமர் அலுவலகத்துக்கும், வீட்டுக்கும், அலரி மாளிகைக்கும் வந்த வண்ணமுள்ளனர். அவர்களுக்கு இப்புதிய தொடர்பாடல் அலுவலகம் வசதியாக அமையுமென்றும் பிரதமர் கூறினார்.

No comments:

Post a Comment