எம்.எப்.எம்.பஸீர்
கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உள்நாட்டு பெண் ஊழியர் கடத்தப்பட்டு, சில மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு, பாலியல் துன்புறுத்தல்களுக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வெளிப்படுத்திய விடயங்கள் குறித்து விசாரணையாளர்களின் அவதானம் திரும்பியுள்ளது.
அதன்படி இந்த கடத்தல் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலை விசாரணைப் பிரிவினர், முன்னாள் அமைச்சரின் ஊடக சந்திப்பின் காணொளிகளை ஆராய தீர்மனித்துள்ளனர்.
அதன்படி விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனைசிங்க, நேற்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இடையீட்டு மனுவொன்றூடாக, முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் ஊடக சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்ட 7 ஊடக நிறுவனங்களிடம் உள்ள அந்த ஊடக சந்திப்பின் செம்மைப்படுத்தப்படாத ஒளி, ஒலிப் பதிவுகளைப் பெற கோரிக்கை முன்வைத்தார்.
இந் நிலையில், சி.ஐ.டி.விசாரணைகளுக்காக கோரும் அந்த ஒளி, ஒலிப் பதிவுகளை வழங்க கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன ஏழு ஊடக நிறுவங்களுக்கு நேற்று உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment