பெண் மருத்துவர் பாலியல் வல்லுறவு : குற்றம் சாட்டப்பட்ட 4 நபர்களும் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2019

பெண் மருத்துவர் பாலியல் வல்லுறவு : குற்றம் சாட்டப்பட்ட 4 நபர்களும் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த நவம்பர் 27ஆம் திகதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் சேர்லாப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்கவும், வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்கவும் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் அறிவித்தார்.

இதற்கிடையே இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்து சென்று எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டச் செய்தனர்.

அப்போது 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனால் 4 பேரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, தனது மகளின் ஆத்மா தற்போது சாந்தியடையும் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பிரியங்கா இறப்பதற்கு கொஞ்சம் நேரம் முன்பாக தனது சகோதரியுடன் செல் போனில் அழுதபடி பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியிருந்தது பரபரப்பையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா ரெட்டி (வயது 27), கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவந்தார்.

இவரது வீடு ஷாம்ஷாபாத் மருத்துவராகப் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் தினமும் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்படி குறித்த தினத்தன்று (நவம்பர் 27) வழக்கம் போல வண்டியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பலாம் என்ற போது சுங்கச்சாவடி அருகே அவரது வாகனத்தின் டயர் பஞ்சரானது.
பின்னர் ப்ரியங்காவை சில ஆண்கள் பின் தொடர்ந்துள்ளார்கள். இதனால் பயந்து போன பிரியங்கா தனது சகோதரிக்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுத்ததும், இன்னிக்கி நீ அலுவலகத்திற்கு சென்று விட்டாயா என்று சகஜமாக கேட்க, ஆம், நான் சென்று விட்டேன், என்னிடம் சிறுது நேரம் பேசிகொண்டே இரு பின்னர் என்ன பிரச்சனை என்று சொல்கிறேன் என்று கூறியுள்ளார் பிரியங்கா. அதற்கு அவரது சகோதரி, ஏன் எதாவது விபத்தில் சிக்கிக்கொண்டாயா என்று கேட்க, நான் எனது வண்டியை சுங்கச்சாவடி அருகில் நிறுத்த அனுமதிக்காததால் என் வண்டியை புறவழி சாலையில் நிறுத்தினேன். தற்போது என் டயர் பஞ்சர் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார். அதற்கு ப்ரியங்காவின் சகோதரி, வண்டியை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிடு என்று கூற காலையில் எப்படி வண்டியை எடுப்பது என்று கேட்டு அங்கிருந்த கிளம்ப மறுத்துள்ளார் பிரியங்கா.

மெக்கானிக்கை வைத்து வண்டியை எடுத்துக்கொள்ளலாம் நீ முதலில் கிளம்பு என்று அவரது சகோதரி கூற, அப்போது தான் அங்கே நடந்தவற்றை பிரியங்கா கூறியுள்ளார். இங்கே சில லாரி ஓட்டுனர்கள் இருக்கிறார்கள், அதில் ஒருவர் வண்டியை சரி செய்வதாக கூறி வண்டியை எடுத்து சென்றார். பின்னர் சரி செய்து விட்டதாக கூறி வண்டியை விட்டார். ஆனால், வண்டி சரியாகவில்லை, எனக்கு மிகவும் பயமா இருக்கு. அதன் பின்னர் அங்கிருந்த ஆண்கள் வேறு ஒரு பையனை அனுப்பி வண்டியை சரி செய்து எடுத்து வருவதாக போனான். ஆனால், வண்டியை எடுத்து வராததால் அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டதாக கூறியுள்ள பிரியங்கா, அவரை சிலர் பின்தொடர்வதாகவும் தனது சகோதரியிடம் கூறியுள்ளார்.

மேலும், என்னை பேய் மாதிரி பார்க்கிறார்கள் எனக்கு மிகவும் பயமா இருக்கிறது என்று தனது சகோதரியிடம் கூறியுள்ளார் பிரியங்கா. அதற்கு அவரது சகோதரியோ, தயவு செய்து சுங்கச்சாவடிக்கு சென்று விடு அங்கே நிறைய பேர் இருப்பார்கள் என்று கூறியுள்ளார். அதற்கு ப்ரியங்கா, அங்கே இருப்பவர்கள் என்னை ஒரு மாதிரி பார்ப்பார்கள் என்று கூறிவிட்டு எனக்கு அழணும் போல இருக்கு, வண்டியை கொண்டு வரும் வரை என்னிடம் பேசி கொண்டே இரு என்று அழுதபடி பிரியங்கா கூறியுள்ளார். ஆனால், அவரது சகோதரியோ எனக்கு வேலை இருக்கிறது. நீ சுங்கச்சாவடிக்கு போ என்று கூற, இறுதியாக ஒரு 5 நிமிடம் பேசு என்று அழுதுள்ளார் பிரியங்கா. அதற்குள் நான் திரும்ப அழைக்கிறேன் என்று கூறிவிட்டு போனை துண்டித்து உள்ளார் ப்ரியங்காவின் சகோதரி.
பின்னர் 9.45 மணிக்கு ப்ரியங்காவின் சகோதரி மீண்டும் அழைத்த போது அவரது போன் ஸ்விச் ஆப் ஆகியுள்ளது. இதையடுத்து சுங்கச்சாவடிக்கு நேரில் சென்று பார்த்துள்ளனர். அங்கேயும் பிரியங்கா இல்லாததால் நள்ளிரவு 3 மணிக்கு போலீசில் புகார் அளித்துள்ளார்கள்.

இந்நிலையில், ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைத்துள்ள ஷாத்நகர் பகுதியில் பாலத்துக்குக் கீழே இளம்பெண்ணின் சடலம் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. அதிகாலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி ஒருவர், இளம்பெண் ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டார். உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் காணாமல்போன பெண்களின் விவரத்தை சேகரித்தனர். அதன்படி, பிரியங்கா குடும்பத்துக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த பிரியங்காவின் சகோதரி, சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது தன் சகோதரிதான் என உறுதிசெய்தார். அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அவருடைய ஸ்கார்ப் மற்றும் விநாயகர் படம் பதித்த தங்கச் சங்கிலியை வைத்து, இறந்தது பிரியங்கா என உறுதிசெய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பிரியங்காவை பின் தொடர்ந்தவர்கள் தான் அவரை கற்பழித்து கொலை செய்து விட்டதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள பாலத்துக்கு அருகே அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், சுங்கச்சாவடி அருகே பதிவாகியுள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடி வந்தது. அதன்படி, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பல அதிர்ச்சி உண்மைகள் தெரியவந்ததுள்ளது. ப்ரியங்காவின் பைக் பஞ்சர் ஆகி அவ்விடத்தில் நிற்கவே, முகமது என்ற அரீப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சென்னகேஷவலு ஆகிய 4 பேர் அவருக்கு உதவி செய்வது போல வந்துள்ளனர். பின்னர், விஸ்கி கலந்த ஒரு குளிர்பானத்தை அவரைக் கட்டாயப்படுத்தி கொடுத்து, பிரியங்காவை தலையில் அடித்து மயக்கமுறச் செய்துள்ளனர்.

பின்னர் லாரி கேபினில் வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து பிரியங்கா அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். ஆனால் பிரியங்கா உயிரிழந்த பிறகும் அந்த நால்வரும் ஒவ்வொருவராக அவரை மீண்டும் கற்பழித்துள்ளனர்.

இதன்பின்னர் ப்ரியங்காவின் உடலை அப்புறப்படுத்த லாரியிலேயே சென்று இடம் தேடியுள்ளனர். அப்போது சத்நகர் அருகே உள்ள பாலத்தின் கீழே உடலை ஒரு போர்வையில் போர்த்தி, அவ்விடத்தில் இறக்கினர். சடலத்தை எரித்து விட்டால் அடையாளம் காண முடியாது என்று எண்ணி பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார்கள்.

மேலும், மாலை 6 மணி முதலே பிரியங்காவை நோட்டமிட்டு பின்னர் அவரது வண்டியை வேண்டுமென்றே பஞ்சர் செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ப்ரியங்காவின் இந்த மரணத்தால் இந்தியாவே அதிர்ந்து போனது. மேலும், ப்ரியங்காவின் மரணத்தில் தொடர்புடையவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறி வந்தனர். பிரியங்காவின் கொலையை ஒட்டி சமூக வலைதளங்களில் #JUSTICEFORPRIYANKA என்ற ஹேஸ்டேக்கை பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் அமித் ஷா போன்ற முக்கிய நபர்கள் டேக் செய்து ட்வீற் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment