ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா காலமானார்.
சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, 57 வயதான ரஞ்சித் டி சொய்சா உயிரிழந்துள்ளார்.
1997 ஆம் ஆண்டு இறக்குவானை பிரதேச சபையில் போட்டியிட்டு அரசியலில் பிரவேசித்த ரஞ்சித் டி சொய்சா, சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினராக கடமையாற்றியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் மூலம், ரஞ்சித் டி சொய்சா பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.
No comments:
Post a Comment