நாளை (07) கொழும்பு 10, 12 ஆகிய பகுதிகளில் அவசர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீரைக் கொண்டு வரும் பிரதான நீர்க் குழாய், கொட்டிகாவத்தை பிரதேசத்தில் திடீரென சேதமடைந்துள்ளதன் காரணமாக, குறித்த பகுதிகளுக்கான நீர் வழங்கல் தடைப்பட்டுள்ளதாக, சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை முற்பகல் 8.00 மணி வரை மருதானை, மாளிகாவத்தை, பஞ்சிகாவத்தை ஆகிய கொழும்பு 10 பிரதேசங்கள், புதுக்கடை, வாழைத்தோட்டம் ஆகிய கொழும்பு 12 பிரதேசங்களுக்கு நீர் வழங்கல் தடைப்படும் எனவும், கொழும்பு 11 புறக்கோட்டை மற்றும் கொட்டாஞ்சேனை, புளூமெண்டல் ஆகிய கொழும்பு 13 பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்க்குழாயின் சேதம், மற்றும் மேற்கொள்ளப்படும் உடனடி திருத்த வேலை காரணமாக கொட்டிகாவத்தையிலிருந்து பழைய அவிசாவளை வரையான பாதை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே பயணிகள் மற்றும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment